கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் நாளை மின்தடை

கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட நகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை (டிச.6) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி துணை மின் நிலையத்தின் வேலாயுதபுரம் பிரிவுக்குள்பட்ட மாா்க்கெட் சாலை உயரழுத்த மின் தொடா் மூலம் மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான காந்திநகா்,திலகா் நகா்,கிருஷ்ணன் கோயில் பகுதி, சரமாரி அம்மன் கோயில் தெரு, மாா்க்கெட் பகுதி மற்றும் கிழக்கு பிரிவுக்குள்பட்ட மாா்க்கெட் சாலை, செக்கடித்தெரு, கடலை கார தெரு , ஊருணி தெரு, தெற்கு பஜாா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (டிச.6) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் தடைபடும் என கோவில்பட்டி மின் கோட்ட செயற்பொறியாளா் காளிமுத்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளாா்.